GPS BULLET FOR HELPING POLICE



குற்றவாளிகள் தப்பிச் செல்லும் காரைத் துரத்திப் பிடிப்பது காவல்துறையினர் அடிக்கடி சந்திக்கும் சவால்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும், மக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களிலும் குற்றவாளிகளின் வாகனங்களைப் வேகமாகப் பின் தொடருவது அப்பாவி மக்களுக்கு ஆபத்தாக முடிந்து விடுகிறது.
பெரிய விபத்துகள் நடந்து உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைகிறது.
பல நேரங்களில் காவல்துறையினரும், குற்றவாளிகளும் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளும்போது ஏதுமறியாத சாமான்யர்கள் பலியாகிவிடுகின்றனர்.
இதைத் தடுப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட புதுமையான வழிதான் ஜிபிஎஸ் குண்டுகள்.

(Global Positioning System) ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய இந்தக் குண்டுகள் குற்றவாளிகள் செல்லும் இடத்தை அறிந்து கொள்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

குற்றவாளிகள் செல்லும் காரை துரத்திச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்போது, துப்பாக்கி மூலம் ஜிபிஎஸ் குண்டை, அந்தக் கார் மீது ஒட்ட வைத்துவிட்டால் போதும்.

அதன் பிறகு, குண்டுடன் இணைக்கப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி செயல்படத் தொடங்கிவிடும். கார் எங்கு செல்கிறது என்பதை தொலைவில் இருந்தபடியே கணினி மூலம் தெரிந்து கொள்ளலாம்.




கார் சென்று கொண்டிருக்கும் இடத்துக்கு அருகேயுள்ள காவலர்களை உஷார்படுத்தி, குற்றவாளிகளை எளிதாக மடக்கிவிடலாம்.
இது அப்பாவி மக்களுக்கு, ஏன். காவல்துறையினருக்கே கூட ஆபத்தில்லாத வழி.

காரில் சென்று ஒட்டிக் கொள்ளும் ஜிபிஎஸ் குண்டை மிக எளிதாக அகற்றிவிட முடியும் என்றாலும், குற்றவாளிகள் காரை நிறுத்தி அதைச் செய்ய மாட்டார்கள் என்பதால் இந்த நடைமுறை சுலபமாக குற்றவாளிகளைப் பிடிக்க உதவும் என்று நம்பப்படுகிறது.



இந்தத் தொழில்நுட்பத்தை ஸ்டார்சேஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. அமெரிக்க காவல்துறையில் இது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் பயன்படும் ஒரு ஜிபிஎஸ் குண்டு மட்டும் 30 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு துப்பாகியுடன் சேர்த்து மொத்த அமைப்பை நிறுவுவதற்கு 3 லட்சம் ரூபாய் செலவாகும்.

இது கொஞ்சம் அதிகாமாகத் தோன்றினாலும், ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் எண்ணிக்கையில் காரைத் துரத்திப் பிடிக்கும் சம்பவங்கள் நடக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இது அவசியமான ஒன்றுதான்.





comment