“Ctrl + Alt + Del” தவறு : பில் கேட்ஸ் கருத்து
பதிவு செய்த நாள் -
செப்டம்பர் 27, 2013, 9:25:16 PM
மாற்றம் செய்த நாள்-
செப்டம்பர் 27, 2013, 10:17:28 PM
கணினிகளில் உள்ளே நுழைவதற்கு Ctrl , Alt, Del பொத்தான்களை ஒருசேர அழுத்த வேண்டும் என்ற முடிவு மிகவும் தவறானது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
இதற்கு முன் இந்த வசதி கணினிகளை முதலில் இருந்து இயக்குவதற்குப் பயன்பட்டது. ஒரு கையால் இந்தப் பொத்தான்களை அழுத்த முடியாது என்பது, இந்த வசதியின் மிகப் பெரிய குறைபாடு என்றும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலாக, ஒரேயொரு பொத்தானைப் பயன்படுத்தும் முறையை தாம் பரிந்துரைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், கீ போர்ட் (KeyBoard) எனப்படும் விசைப் பலகையை வடிவமைத்த ஐ பி எம் (IBM) நிறுவனப் பொறியாளர், Ctrl , Alt, Del பொத்தான்களைப் பயன்படுத்துவதை விரும்பியதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.