Without Application Hide Folder From Android Phones

பைல்களை மறைக்க நிறைய அப்ளிகேஷன்கள் இருக்கிறது, இருந்தாலும் அப்ளிகேஷன் இல்லாமல் மறைக்கும் இரண்டு முறைகளை இன்று காண்போம்.

முறை - 1:
1)உங்கள் ஆண்ட்ராய்டு ஃபைல் மேனேஜருக்குச் செல்லவும், அதில் எந்த போல்டரை மறைக்க வேண்டுமோ அதனை Rename(மறுபெயராக்கம்) செய்யவும்.
2)இப்பொழுது அந்த போல்டரின் பெயரில் முதல் எழுத்தாக ஒரு . (dot) சேர்க்கவும். உதாரணத்துக்கு videos என்ற போல்டரை .videos என்று மறுபெயரிடவும்.
3)இப்பொழுது அந்த போல்டரில் உள்ள பைல்கள் எதுவும் கேலரியில் தெரியாது.
4)அவை உங்கள் பைல் மேனேஜரிலும் மறைந்திருக்கும், அதைத் திரும்பவும் காண, நீங்கள் file manager->options->show hidden files என்பதை டிக் செய்ய வேண்டும்.


முறை-2:
1)இதற்கு ஆண்ட்ராய்டின் ஃபைல் மேனேஜர் ஒத்து வராது, இந்த முறைக்கு நீங்கள் புதிய ஃபைல் உருவாக்கும் வசதியுள்ள ஏதேனும் ஒரு ஃபைல் மேனேஜரை பயன்படுத்தவேண்டும். நான் ES file explorer பயன்படுத்துகிறேன்.
2)எந்த போல்டரை மறைக்க வேண்டுமோ அதனைத் திறந்து கொண்டு அதற்குள் ஒரு புதிய ஃபைலை உருவாக்கவும்.
4) அந்த பைலின் பெயர் .nomedia என்று கொடுங்கள், வேறு எதுவும் சேர்க்கக்கூடாது.
5)அந்த பைல் உருவாக்கிய பிறகு பைல் மேனேஜரில் அந்த பைலை காட்டாது, இப்பொழுது மீடியா ஸ்கேனரை ரன் செய்யுங்கள், உங்கள் கேலரியில் அந்த போல்டரின் படங்கள் வீடியோக்கள் மறைந்திருக்கும்.
இதில் எந்த வழி எளிதானது என்று நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் நான் இரண்டாவது வழியை பரிந்துரைக்கிறேன்.

comment